Home
» வினோதங்கள்
» உடலின் மேல் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை! வீடியோ India’s first ‘Harlequin Baby’ born
உடலின் மேல் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை! வீடியோ India’s first ‘Harlequin Baby’ born
www.indiasian.com India’s first ‘Harlequin Baby’ born
இந்தியாவில் மஹாராஷட்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவனை ஒன்றில் பெண் குழந்தை ஒன்று தோல் இல்லாமல் பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.
நாக்பூர் லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று அதிகாலை 12.30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்
இதில், அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தை வெளிப்புற தோல் இன்றி, கண்கள் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. இருந்தாலும், அந்த குழந்தை சராசரி குழந்தையை போல், அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பராமரிப்பு கருதி, பிரத்யேக வார்டில் வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தான் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என்றும், மருத்துவ துறையில் இதுபோல் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘ஹார்லிகுவின் இக்தியோசிஸ்’ என பெயர் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
3 லட்சத்தில் ஒரு குழந்தை இதுபோன்ற அரிய வகை தோற்றத்துடன் பிறப்பதாக அந்த குழந்தையின் தாய்க்கு பிரசவம் பார்த்த டாக்டர் அவினாஷ் பனைத் நிருபர்களிடம் கூறினார்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்